NALCO Recruitment 2026 – 268 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! ITI, Diploma முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
இந்திய அரசின் முக்கியமான Navratna PSU நிறுவனங்களில் ஒன்றான NALCO (National Aluminium Company Limited) தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Operator, Technician, Mining Mate, Junior Foreman உள்ளிட்ட பல்வேறு Non-Executive பணியிடங்களுக்கு மொத்தம் 268 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு துறையில் நிரந்தர வேலை தேடி வரும் ITI, Diploma மற்றும் B.Sc படித்த இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்பட உள்ளது. மேலும் PF, DA, Bonus, Medical Facility போன்ற பல அரசு சலுகைகளும் வழங்கப்படும்.
Post Wise Vacancy, Salary & Qualification Details
| Post Name | Vacancy | Salary | Qualification | |
|---|---|---|---|---|
| Operator (HEMM) Gr. III | 06 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு + MMV (2 வருடம்) அல்லது Diesel Mechanic (1 வருடம்) பிரிவில் ITI மற்றும் Apprenticeship சான்றிதழ் + கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy License). • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| Mining Mate Gr. III | 21 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + DGMS வழங்கிய Mining Mate சான்றிதழ் (Opencast Metalliferous Mines). • அனுபவம்: 2 ஆண்டுகள் | |
| Jr. Foreman (Mines) | 08 | ₹36,500 – ₹1,15,000 | Diploma (Mining / Mining Engineering) + DGMS வழங்கிய Mining Foreman சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| Jr. Foreman (Electrical) | 03 | ₹36,500 – ₹1,15,000 | Diploma in Electrical Engineering + ஒடிசா மின் உரிம வாரியம் வழங்கிய Supervisory சான்றிதழ் (M.V/ H.T/ E.H.T). • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| SUPT (JOT) – Operator | 55 | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) | 10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). | |
| Operator Gr. III | 54 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| SUPT (JOT) – Fitter | 12 | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) | 10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). | |
| Technician (Fitter) Gr. III | 13 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| SUPT (JOT) – Electrical | 35 | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) | 10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). | |
| Technician (Electrical) Gr. III | 35 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். | |
| SUPT (JOT) – Laboratory | 06 | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) | B.Sc. (Hons) Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். • அனுபவம்: தேவையில்லை (Nil). | |
| SUPT (JOT) – Instrumentation / Instrument Mechanic | 10 | தொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்) அதன்பின்: ₹29,500/- (T0 Grade) | 10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: தேவையில்லை (Nil). | |
| Technician (Instrumentation / Instrument Mechanic) Gr. III | 10 | ₹29,500 – ₹70,000 | 10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ். • அனுபவம்: 2 ஆண்டுகள். |
வயது வரம்பு
அரசு விதிகளின்படி வழங்கப்படும் வயது தளர்வு
- OBC (NCL): 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- SC / ST: 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – UR): 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – OBC): 13 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் (PwBD – SC/ST): 15 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை
NALCO Recruitment 2026 தேர்வு முறையில் Computer Based Test (CBT), Trade Test மற்றும் Document Verification மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம் – 21 மே 2026
- கடைசி தேதி – 10 ஜூன் 2026
ஏன் இந்த வேலை முக்கியம்?
NALCO போன்ற மத்திய அரசு PSU நிறுவனங்களில் வேலை கிடைப்பது பலரின் கனவாகும். அதிக சம்பளம், நிரந்தர வேலை, பதவி உயர்வு வாய்ப்பு மற்றும் அரசு சலுகைகள் காரணமாக இந்த வேலைவாய்ப்பிற்கு இந்தியா முழுவதும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ITI மற்றும் Diploma முடித்தவர்கள் இந்த Golden Opportunity-ஐ தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது:
NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.05.2026 முதல் 10.06.2026 தேதிக்குள் https://nalcoindia.com/ இணையதளத்தில் சென்று Click here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Official Notification Apply Now! Official Website
0 Comments